கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் நான்கு இலட்சத்து 873பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கஸகஸ்தானில் இதுவரை நான்கு இலட்சத்து 33ஆயிரத்து 931பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்காயிரத்து 444பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கபபட்ட 28ஆயிரத்து 614பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 221பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.