தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதால் அரசியல் லாபம் பெறுவதற்கு மேகதாது விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இதில் நாங்கள் சட்ட ரீதியாக போராடுவோம் என கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் கருத்து தெரிவித்த அவர், ‘தண்ணீர் விடயத்தில் தமிழக அரசு எப்போதுமே தகராறு செய்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி நாங்கள் செயல்படுகிறோம்.
குடிப்பதற்காகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் கர்நாடகா எல்லைக்குள் மேகதாது அணை கட்டப்படுகிறது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்துக்கு வேண்டிய தண்ணீர் வழங்கப்படும். மார்கண்டேயா நதி விடயத்திலும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதால் அரசியல் லாபம் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். மேகதாது அணையால் தமிழகத்துக்கு பயனுள்ளது எனத் தெரிந்தும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். நாங்களும் சட்டரீதியாக போராடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.