பொலிஸார் குற்றவாளிகளை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தி சிந்து மாகாணத்தின் நாண்டெரோ நகராட்சி முன்னால், மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்ததாக அந்நாட்டு உள்ளூர் செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை அரசியல், சமூக நலன், வர்த்தகம் மற்றும் மத அமைப்புகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்களும் உண்ணாவிரதத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுடன் பேசிய உள்ளூர் தலைவர்கள் உட்பட போராட்டக்காரர்கள், பல திருட்டு சம்பவங்கள் மற்றும் வாகனம் திருட்டு ஆகியன இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை.
ஆனால், தற்போது இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகின்றமையினால் குடியிருப்பாளர்களிடையே அமைதியின்மையை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குற்றவாளிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று பொலிஸார் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது என்று டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பார்ச்சூண்ட் கிராமத்தைச் சேர்ந்த சுல்பிகர் அலி சன்னோவின் வீட்டைக் கொள்ளையடித்த திருடர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இருப்பினும், ஆளும் கட்சியின் தலைவர்களில் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பின்னர் கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை பிராந்தியத்தில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒரு வாரத்திற்குள் திருடப்பட்டுள்ளன.ஆனால் அவை எதுவும் கண்டுப்பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.இதனை மக்கள், அமைதியாக பொறுத்துக்கொள்ள முடியாது.
கொள்ளையர்களுக்கு உள்ளூர் பொலிஸார் உதவுகிறார்கள் என்பதே சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதமையின் ஊடாக தெரிகின்றது என டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே இவ்விடத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பொலிஸார் மீது டி.ஐ.ஜி.பி மற்றும் உரிய பொறுப்பதிகாரிகள், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் நாண்டெரோ பொலிஸ் நிலைய ஊழியர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு பதிலாக நகரத்தில் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.