நாடாளுமன்றத்திற்குள் வருமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் அழைப்பினை பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
தமது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த வாரம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நுழைவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு பசில் ராஜபக்ஷ அரசாங்கத்தை பலப்படுத்துவார் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் பதவியை வழங்குவதற்கான திட்டங்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிதி அமைச்சின் கீழ் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சு பொறுப்பு பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் உயர் மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நிதி அமைச்சின் கீழ் உள்ள பெரும்பாலான பொறுப்புகள், புதிய அமைச்சிற்கு மாற்றப்பட உள்ளன.