காஷ்மீரில் ஹைபிரிட் பயங்கரவாதிகள், அல்லது பகுதிநேர பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் சவால்களை எதிர்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான பயங்கரவாதிகள் முழு நேர பயங்கரவாதிகள் அல்ல. மாறாக தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கு மீது தாக்குதல்களை நடத்திவிட்டு மீண்டும் வழமையான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான சம்பவங்களில் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறாத துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்காரணமாக பாதுகாப்பு படையினர் சவால்களை எதிர்கொண்டு வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.