நுவரெலியா- டயகம , வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சுமார் 3 அடி நீளமான சிறுத்தையொன்றையே சடலமாக கண்டெடுத்ததாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்ற கோணத்தில் டயகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த சிறுத்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் அதை நுவரெலியா வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.