ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் இடம்பெற்ற ஊழல் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘ரஃபேல் ஊழல் விசாரணைக் குறித்த தகவல் வெளியாகி 48 மணி நேரமாகியும் பிரதமர் மோடி மௌனம் சாதிக்கிறார்.
ஆனால் மோடிபோல உண்மை மௌனமாக இருக்காது. ஒருநாள் வெளிவந்தே தீரும். மத்திய அரசுக்கு ரஃபேல் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.