தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண இவ்வாறு கூறினார்.
சுகாதார அமைச்சின் ஊடாக அனைத்து தரவுகளும் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் ரமேஷ் பதிரண குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று நிலைமைகள் குறித்து சில வைத்தியர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், சுகாதார அதிகாரிகள் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தற்போது பரவும் டெல்டா மாறுபட்டு இருந்து பாதுகாக்க மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரோயினார்.