கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா வகை உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகம் காணப்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் வீரியமிழப்பு – கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கொவிட் தொற்றில் இருந்து மீண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் என்ற தலைப்பில் ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அங்கீகரிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் டெல்டா வைரஸின் வீரியத்தை அழிப்பதில் திறன் குறைவாக இருக்கும் நிலையில், கொவிட் தொற்றில் இருந்து மீண்டபின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரசில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைப்பதில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ்ட் கோவிஷீல்ட் செலுத்திய பின் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள், தொற்றில் இருந்து மீண்டு ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வகை வைரஸை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.