அடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு உரப் பற்றாக்குறையும் நாட்டில் இருக்காது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து உரப் பங்குகளையும் உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறினார்.
தற்போது 102,000 மெ.தொன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் எவ்வாறாயினும், உரப் பற்றாக்குறை இருப்பதாக கூறி, பங்குகளை விவசாயிகளுக்கு விடுவிக்க அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளை நிறுவங்கள் புறக்கணித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் நேற்று இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு உரங்களை வழங்க, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
இதேவேளை உர நெருக்கடி தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் அரசியல் இருப்பதாகவும் இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.