நடிகை ஹன்சிகா மகா திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்கவுள்ளார்.
அதேநேரம் பெண்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.