சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின், அவரது தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மனித உரிமைகள் குழு, திபெத் வாட்சை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திபெத்தில் பல உள்ளூர் ஆதாரங்கள் கடும் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 1ஆம் திகதி, சி.சி.பி நூற்றாண்டுக்கு முன்னதாக. மேலும் சில திபெத்தியர்கள், நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புகளில் ஈடுபட்டதாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்து திபெத் வாட்சின் ஆராய்ச்சியாளர் சோனம் டாப்கியல் கூறியுள்ளதாவது “சீன அரசாங்கம் பல வருடங்களாக திபெத்தியர்களை தங்களது வெளிநாட்டு திபெத்திய அலுவலகத்தின் கிளை ஊடாக தொடர்ந்து தாக்கி வருகிறது.
மேலும் தடுப்பு காவலில் இறந்த லாமோவின் விடயங்களை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். அவர் இந்தியாவில் உறவினர்களை தொடர்பு கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.
இதேபோன்ற வழக்குகள் திபெத்துக்குள், திபெத்தியர்களால் பதிவாகியுள்ளன. ஆனால் அரசாங்கத்தின் கடும் கண்காணிப்பு காரணமாக,இதுபோன்ற உரிமைகோரல்களைச் சரிபார்ப்பதனை நாங்கள் எப்போதும் குறைத்துக் கொண்டுள்ளோம்.
மேலும், பிரித்தெடுத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கிய சீன நிறுவனங்களுக்கு எதிராக (2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில்) உள்ளூர்வாசிகள் கடும் போராட்டத்தை நடத்தியதிலிருந்து திரிரு கடும் இராணுவமயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை திபெத் வாட்ச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, “பெய்ஜிங்கின் தந்திரோபாயங்கள் படிப்படியாக மூலோபாயக் கொள்கைகளாக மாறியுள்ளன. அவை உள்ளூர்வாசிகளை தன்னிச்சையாக கைது செய்ய வழிவகுத்தன.
பழிவாங்கும் பயம் காரணமாக துன்புறுத்தப்பட்ட திபெத்தியர்களைப் பற்றி பேச சமூகத்தில் தயக்கம் ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.