மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் அனுபவமற்ற 18பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து பெயரிட்டுள்ளது.
தற்போது இலங்கை அணிக்கெதிரான தொடரை நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் விளையாட தயாராகி வருகின்றது.
இந்தநிலையில் இத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் 48 மணித்தியாலங்களே உள்ள நிலையில், வீரர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தொடருக்காக ஒன்பது அறிமுக வீரர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். பிரைடன் கார்ஸ், ஸெக் கிரெவ்லி, லூயிஸ் கிரிகோரி, வில் ஜெக்ஸ், டொம் ஹெல்ம், டேனியல் லோரன்ஸ், டேவிட் பெய்ன், பில் சால்ட் மற்றும் ஜோன் சிம்ப்சன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜேக் போல், டேனி பிரிக்ஸ், பிரைடன் கார்ஸ், ஸெக் கிரெவ்லி, பென் டக்கெட், லூயிஸ் கிரிகோரி, டொம் ஹெல்ம், வில் ஜெக்ஸ், டேனியல் லோரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், மெட் பார்கின்சன், டேவிட் பெய்ன், பில் சால்ட், ஜோன் சிம்ப்சன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணிக்கு ஐ.பி.எல். தொடரின் போது விரல் முறிவினால் பாதிப்படைந்த சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி, கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.