உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்புகளுக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார்.