களுத்துறை – அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பிம்புரவத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் மற்றும் கேகாலை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் மேற்கு மற்றும் தலைமன்னார் கிழக்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கேகாலை மாவட்டம் மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட Higuloya மற்றும் Mahawatta ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.