நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) ஆயிரத்து 223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், 3 ஆயிரத்து 391 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.