மாநிலங்களுக்கு போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் பல மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே அனைத்து மாநிலங்களுக்கும் போதிய அளவில் தடையின்றி தடுப்பூசி விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துவதே புதிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
தயவு செய்து கின்னஸ் சாதனை முயற்சிக்காக எந்த விளையாட்டிலும் ஈடுபட வேண்டாம். அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.