சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி 220 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
ஹராரே மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 468 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா 150 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 95 ஓட்டங்களையும் டஸ்கின் அஹமட் 75 ஓட்டங்களையும் மொமினுல் ஹக் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், முஸரபானி 4 விக்கெட்டுகளையும் ட்ரிபானோ மற்றும் நியாச்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நகரவா மற்றும் மில்டொன் சும்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி, 276 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கைடானோ 87 ஓட்டங்களையும் பிரெண்டன் டெய்லர் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 5 விக்கெட்டுகளையும் சகிப் ஹல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 192 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதில் பங்களாதேஷ் அணி சார்பில், சந்தோ 117 ஓட்டங்களையும் சத்மான் இஸ்லாம் 115 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், நகரவா 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 447 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 256 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 220 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் டெய்லர் 92 ஓட்டங்களையும் டொனால்ட் ட்ரிபானோ 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் மற்றும் டஸ்கின் அஹமட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் சகிப் ஹல் ஹசன் மற்றும் எபடொட் ஹொசைனக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமதுல்லா தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த போட்டியுடன் மொஹமதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார். அவர் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் 16 அரைசதங்கள் அடங்களாக இரண்டாயிரத்து 914 ஓட்டங்களை பெற்றுள்ளார்.