இந்தியாவில் அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ‘அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது. தடுப்பூசி அதிகரிக்கவில்லை. மாறாக பற்றாக்குறைதான் நீடிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அந்த தகவலுடன் தடுப்பூசி குறித்த அட்டவணை ஒன்றையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
குறித்த அட்டவணையில், இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 60 சதவீதமானோருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாள்தோறும் 88 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.