இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 827 தொற்றாளர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 56 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 546 பேர் உயிரிழந்துள்ள நிலையில். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 9 ஆயிரத்தை கடந்துள்ளது.