துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆயிரத்து 923பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 45ஆவது நாடாக விளங்கும் துனிசியாவில் இதுவரை 16ஆயிரத்து 494பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 310பேர் பாதிக்கப்பட்டதோடு 106பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 85ஆயிரத்து 051பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 526பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 378பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.