கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்ஹேன்கம, ஹேவாஹின்ன, அவிசாவளை என்ற முகவரியில் வசிக்கும் நந்தசிறி போவத்த என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
சபரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள சிங்கராஜ இடைத்தங்கல் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைதினம் மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.