நாட்டில் புதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும் 7 பேரே இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மிலிந்த குணதிலக்க, ஹரிப்பிரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரூ, ஷானக்க விஜேசிங்க, ரவிந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேத்திய குணசேகர ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகள் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.