இலங்கையில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அதற்கமைய நேற்று 3 இலட்சத்து 38 ஆயிரத்து 572 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸும் 35 ஆயிரத்து 410 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் 37 இலட்சத்து 64 ஆயிரத்து 750 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸும் 11 இலட்சத்து 83 ஆயிரத்து 391 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.
அதேநேரம், நேற்று 3 ஆயிரத்து 365 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸும் 7 ஆயிரத்து 416 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின்முதலாவது டோஸும் செலுத்தப்பட்டது.