பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேவில் ஆசியான் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதையும், ஆதரவு தெரிவிப்பதையும் ஆசியான் ஒத்துழைப்பு நாடுகள் தடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் அமைதியின்மை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினை பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரு பூமி ஒரே சுகாதாரம் என்ற நோக்கில் உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டும்.
ஆப்பானிஸ்தானின் எதிர்காலம் அதன் கடந்த காலத்தை போல் இருக்கக்கூடாது. அதன் அண்டை நாடுகளுக்கு பயங்கரவாதம் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.