எல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கு பின் இருநாட்டு வெளியிறவு துறை அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘எல்லைப் பகுதிகளில் சீனா தன்னிச்சையாக நிலைப்பாட்டை மாற்றி வருவதை இந்தியா ஒருப்போதும் ஏற்றுக்கொள்ளாது.
எல்லையில் முழுமையான மறுசீரமைப்பும், அமைதியும் நிலவினால் தான் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும்.
எல்லை பிரச்சினைக்கு இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன’ எனப் பதிவிட்டுள்ளார்.