இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 41 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 1 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 580 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.