கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு பாதை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று யாழ்ப்பாணம்- நாரந்தனை, வடமேல் கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று (வியாழக்கிழமை) முதல் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவின் ஆதிகோவிலடி கிராமம், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.