யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, சுழிபுரத்தைச் சேர்ந்த (33 வயது) ஆண் ஒருவர், நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று நேற்று இரவு 8 மணியளவில் சுழிபுரத்தைச் சேர்ந்த (72 வயது) பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இருவரும், கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.