தமிழகத்திற்கு ஒரேநாளில் 6.93 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.01 இலட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும், 91 ஆயிரத்து 580 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்துள்ளனர்.