மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.
அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.