ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் கட்டாரில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடும் மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க துருப்புக்கள் பின்வாங்குவதால் ஆப்கானிஸ்தானைச் சுற்றி தாக்குதல்களை நடத்துவதும், பல இடங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளமையால் இரண்டு தசாப்த கால மோதல்கள் மேலும் மோசமடைந்துள்ளன.
செப்டம்பர் முதல் டோஹாவில் பேச்சுவார்த்தையாளர்கள் சந்தித்து வருகின்ற போதும் செப்டம்பர் 11 க்குள் வெளிநாட்டு துருப்புக்கள் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பே கணிசமான முன்னேற்றம் காணத் தவறிவிட்டனர்.
இந்நிலையில் மக்களைக் கொல்வதைத் தடுக்க, சமாதான முன்னெடுப்புகளைத் தொடர முக்கியமான நடவடிக்கைகளை எடுப்போம் என தேசிய நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா கூறியுள்ளார்.
இதேவேளை தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு சாதகமான முடிவைக் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தலிபானின் துணைத் தலைவரும் பேச்சுவார்த்தையாளருமான முல்லா அப்துல் கானி பரதர் குறிப்பிட்டுள்ளார்.