தென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக குஜெஸ்தான் மாகாணத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஈராக்கின் எல்லையில் அமைந்துள்ள குஜெஸ்தானில் உள்ள அரபு சிறுபான்மையினத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த மரணத்திற்கு பாதுகாப்பு படையினர்தான் காரணம் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஈரானில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் மின் பற்றாக்குறை அந்நாட்டு மக்களை கோபமடைய வைத்துள்ளது.