அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, இந்த விடயம் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.