நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 18இலட்சத்து ஏழாயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 20ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில் இதுவரை மொத்தமாக 17ஆயிரத்து 778பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 874பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 160பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 87பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 60ஆயிரத்து 506பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.