சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு போன்றே இம்முறையும் வழமை போன்று மக்காவுக்கான யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பது தனது நம்பிக்கையாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கொரோனா தொற்றுநோயை முற்றாக ஒழித்திட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.