அவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியின் தாயகமான நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 110 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை மாநிலம் தழுவிய முடக்கத்தின் இரண்டாவது வாரத்தை நெருங்கும் நிலையில் விக்டோரியா மாநிலத்தில் 22 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்றைய நாடுகளை விட ஒப்பீட்டளவில் கொரோனா பரவலை குறைவாக வைத்திருக்கும் அவுஸ்ரேலியாவில் இதுவரை 32,100 நோயாளிகளும் 915 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.