• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
83 0
A A
0
85
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தொடர் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றதன் விளைவாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமை தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபைக்குப் பிரதம செயலாளராகச் சிங்கள இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பது மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களையே நிராகரிக்கும் ஓர் இனவாதச் செயற்பாடாகும்.

மாகாண சபைகளுக்கான 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதம செயலாளரை நியமிப்பது ஜனாதிபதிதான் எனினும் அந்நியமனம் மாகாண முதல்வரின் உடன்பாட்டுடனேயே செய்யப்படல் வேண்டும்.

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த உடனேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருக்கவேண்டிய அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கபடநோக்கங்களுடன் தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. தேர்தலுக்கு முன்பாக மாகாணசபைக்கூடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகக் குறைந்தபட்ச அதிகாரங்களையும் பிடுங்கிவிட வேண்டும் என்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தனித்துவமான மொழி, பண்பாடு, பாரம்பரிய வாழிடம், ஆள்புலம் என்பனவற்றைக் கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தனியானதொரு தேசம் ஆகும். ஆனால், இதனை நிராகரித்து ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்று முழக்கமிட்டு வரும் பேரினவாதம் தற்போது ‘ஒரே நாடு ஒரே நிர்வாகம்’ என்று ஒடுக்குமுறையின் அடுத்த கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சிகரமான இத்தகைய திட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கான சரியான எதிர்வினைகளை ஆற்றுவதற்குக் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

”நதிகளிலே நீராடும் சூரியன்” திரைப்படத்தின் புதிய அப்டேட்!

Next Post

ஓடிடியில் வெளியாகுகிறது நெற்றிக்கண் திரைப்படம்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
Next Post
ஓடிடியில் வெளியாகுகிறது நெற்றிக்கண் திரைப்படம்!

ஓடிடியில் வெளியாகுகிறது நெற்றிக்கண் திரைப்படம்!

போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு

திடீரென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி!

திடீரென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: