2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 86 சதவிகிதம் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனவே ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க இது பொருத்தமான நேரம் அல்ல என்றும் வர்த்தக அமைச்சர் மேலும் கூறினார்.
ஆசிரியர்களுக்கான 100 சதவீத ஊதிய உயர்வுக்கு தாம் முழுமையாக உடன்படுவதாக தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி அதற்கான சத்தியத்தை குறைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
நலன்புரி நடவடிக்கைகளை அதிகரிக்க விரும்பினால் அரசாங்கத்திற்கு மேலும் வரிவிதிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு வரிவிதித்தால் மக்களுக்கு மேலும் சுமையாக அமைந்துவிடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.