நாட்டின் 14 பகுதிகளில் டெல்டா மாறுபாடு உறுதி செய்யப்பட்ட மேலும் 30 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு உட்பட கோட்டை, கொலன்னாவ, அங்கொடா, நவகமுவ, மஹாபகே, கட்டூநாயக்க, நீர்கொழும்பு, இரத்தமலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து டெல்டா மாறுபாட்டின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தாலும், சமூகத்தில் கண்டறியப்படாத இதுபோன்ற நோயாளிகள் அதிகமாக இருக்கலாம் என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.