இத்தாலியில் புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பாதிப்புக்களில், 95 சதவீதம் இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை மாறுபாடு என இத்தாலியின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இத்தாலியின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 20ஆம் திகதி நிலவரப்படி புதிய கொரோனா நோயாளிகளில் 94.8 சதவீதத்தினரிடம் டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வீதம், கடந்த மாதம் 22ஆம் திகதி 22.7 சதவீதமாக இருந்தது. இந்தத் திகதியில் ஆல்ஃபா வகை கொரோனா தொற்று 57.8 சதவீதமாக இருந்தது.
கடந்த 20ஆம் திகதி நிலவரப்படி ஆல்ஃபா வகை கொரோனா தொற்று 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 11ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை 4,343,519பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 128,047பேர் உயிரிழந்துள்ளனர்.