யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையிலுள்ள வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில், 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அனைவருக்கும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தொடர்பினை பேணியவர்களையும் கண்டறிந்து, அவர்களையும் தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.