சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ரயில் சேவைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் மாகாணங்களுக்கு இடையில் 30 ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், அரச சேவையாளர்கள் வழமைப்போன்று இன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால், விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேவையேற்படும் பட்சத்தில் மேலும் ரயில் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.