தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார்.
இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.