நாட்டில் தேவை ஏற்பட்டால் மட்டுமே முடக்கம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன, பொதுமக்களை வைரஸிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அத்தோடு, மாத்தளை – ரத்தோட்டையில் வைரஸ் பரவி வருவதாகவும் இதன் விளைவாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் ரத்தோட்டையில் முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்றும் ரோஹினி விஜேரத்ன கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே, தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படும் என்றும் தேவை ஏற்பட்டால் மட்டுமே முடக்கம் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.