பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதன்போது 2019 ஆம் ஆண்டு வெளியான உளவு விவகாரம் குறித்து கருத்து வெளியிடப்பட்டதுடன், இது குறித்து டெலிகிராப் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.
அதேநேரம் பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தீவிரமானதாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.