நாட்டில் தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்றும் அவர் வலியறுத்தினார்.
இதேவேளை டெங்கு நோயானது கொரோனானவைப் போன்று ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவதினால் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
டெங்கானது கொரானா தொற்றை விடவும் விரைவாக பரவும் என்றும் அவர் மேலும் கூறினார்.