நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடையடுத்து, 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.