கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 13ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆறாயிரத்து 672பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 787பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 32ஆயிரத்து 294பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 192பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 61ஆயிரத்து 378பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.