மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக, 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 29இலட்சத்து ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 42ஆயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 685பேர் பாதிக்கப்பட்டதோடு 611பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 88ஆயிரத்து 120பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 798பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 22இலட்சத்து 70ஆயிரத்து 427பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.